குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து விரதம் இருந்த பக்தர்கள் திருகாப்பு கட்டி காளி, சிங்கம், புலி, கரடி, குரங்கு சிவன் பார்வதி போன்ற பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று மேளதாளம் முழங்க ஆடிப்பாடி அம்மனுக்கு காணிக்கை திரட்டி வருகிறார்கள். இவ்வாறு திரட்டப்படும் காணிக்கைகளை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் மகிஷாசுர சம்ஹாரம் அன்று கோயிலில் காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST