தமிழ்நாடு

tamil nadu

கொட்டும் மழையில் பேருந்தினுள் குடை பிடித்தவாறு பயணம் செய்த பயணிகள்

ETV Bharat / videos

கொட்டும் மழையில் அரசு பேருந்துக்குள் குடை பிடித்தவாறு பயணம்.. வைரலாகும் வீடியோ! - rain

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:46 PM IST

திண்டுக்கல்: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று (செப்.27) மாலை திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. 

இந்த நிலையில், அரசுப் பேருந்தானது நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கிச் செல்லும் போது மழை பெய்யத் தொடங்கியது. அப்போது அரசுப் பேருந்தின் மேற்கூரைப் பகுதியிலிருந்த ஓட்டைகள் மற்றும் விரிசலின் காரணமாக மழை நீரானது பேருந்தின் உள்பகுதிகளிலும், இருக்கைகளிலும் விழுந்தன.

இதனால் பேருந்தில் பயணிகள் உட்கார்ந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பேருந்து உள்ளே குடை பிடித்தவாறு பயணிகள் பயணம் செய்தனர். தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்தை முறையாகப் பராமரிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இயக்கிட வேண்டும் எனவும், பருவ மழைக்காலம் தொடங்குவதால் இதேபோல் நிலைமையில் இருக்கும் பேருந்துகளைக் கண்டறிந்து உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் அரசுக்குப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details