தாளவாடியில் பலத்த மழை-தரைபாலத்தை மூழ்கடித்து சென்ற காட்டாற்று வெள்ளம் - தாளவாடி மலைப்பகுதியில் பலத்த மழை
ஈரோடு, தாளவாடி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. சிக்கள்ளி, பாலப்படுகை, இக்களூர், நெய்தாளப்புரம் வனத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஒடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி என்ற இடத்தில் உள்ள தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST