தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Tomato price hike: ஈரோட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு! - தக்காளி விலை மீண்டும் உயர்வு

🎬 Watch Now: Feature Video

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை மீண்டும் உயர்வு

By

Published : Jun 15, 2023, 2:10 PM IST

ஈரோடு: தமிழகம் மற்றும் கர்நாடகம் எல்லையில் உள்ள தாளவாடி மலைப் பகுதியிலிருந்தும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளியின் விலை 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி 50 ரூபாயாக விலை உயர்ந்து உள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து குறைந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தக்காளி விலை உயர்ந்து வருகிறது எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கோடை காலத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துக் காணப்படும். இதனால் தக்காளியின் விலை வருடம் தோறும் கோடைக் காலங்களில் குறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து வருவதாகவும் காய்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களும் பாதிப்படைந்து உள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு காரணமாக விடுதிகளில் தக்காளி மற்றும் காய்கறிகளின் பயன்பாடு அதிகரித்த நிலையில் தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details