தமிழ்நாடு

tamil nadu

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக பைக் ஓட்டிய போதை ஆசாமி கைது

ETV Bharat / videos

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் 8 போட்ட போதை ஆசாமி; வீடியோ வைரலான நிலையில் அதிரடி கைது! - Drunken man arrested in Coimbatore

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:43 PM IST

கோவை: சூலூர், திருச்சி சாலையில் கடந்த வாரம் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துக்கு முன்பாக போதை ஆசாமி ஒருவர், சாலையின் குறுக்கே விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஒட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார். 

இதனைப் பேருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. மேலும் மது போதையில் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய போதை ஆசாமியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். 

இந்த நிலையில் போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் ஓட்டிய போதை ஆசாமி தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த சூலூர் போலீசார், திருச்சி சாலையில் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் போக்குவரத்துக்கு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய நபர், ஒண்டிபுதூர் பகுதியில் வசிக்கும் ராஜகோபாலன் என்பவரது மகன் வினோத் மணிகண்டன் என்பதும், இருகூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்தியச் சிறையில் அடைத்த போலீசார், அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details