வீடியோ: வெயிலில் காத்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்த குடியரசு தலைவர் முர்மு - குடியரசு தலைவர் திரௌபதி
மதுரை:குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று (பிப்.18) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்பு கார் மூலமாக பாதுகாப்புடன் புறப்பட்டார். இந்த கார் கோயிலுக்கு அருகே உள்ள தெற்கு ஆவணி மூல வீதிப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வெயிலில் காத்திருந்த பொதுமக்களை முர்மு பார்த்தார். இதையடுத்து உடனடியாக காரை நிறுத்தச்சொல்லி, கீழே இறங்கி நடந்து சென்று பொதுமக்களுக்கு வணக்கமும், நன்றியும் தெரிவித்தார். குடியரசு தலைவரை பார்த்த பொதுமக்கள் உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்தனர்.