தாமிரபரணி ஆற்று வெள்ளத்தின் கழுகுப் பார்வை காட்சி! - தற்போதைய திருநெல்வேலி நிலை
Published : Dec 20, 2023, 1:40 PM IST
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நெல்லையில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி, குளம், ஏரி போன்றவை உடைந்து, குடியிருப்புப் பகுதிகளுக்கு வெள்ள நீர் புகுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் தற்போது வரை தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். படிப்படியாக நீரின் அளவு குறைந்து வரும் நிலையில், நெல்லை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர், இரு கரைகளையும் தொட்டு பாய்ந்தோடும் ட்ரோன் காட்சி வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.