வீடியோ: தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 70 அடியில் கொடிக்கம்பம் - திரௌபதி அம்மன் கோயில் விழா
கோயம்புத்தூர்: ஆனைமலையில் பிரசித்திப் பெற்ற தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் தேர்த் திருவிழாவுக்காக நேற்று முன்தினம் (பிப்.17) கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. அதில், சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 70 அடி மூங்கில் கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனைமலை ஆழியார் ஆற்றில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு 70 அடி கொடிக்கம்பத்தை தோளில் சுமந்தபடி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கொடி கம்பத்துக்கு மாலைகள் மற்றும் கொடி கட்டிய பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் 70அடி உயரமுள்ள கொடி கம்பம் நடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மார்ச் 8ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு