Video:ஓடிட்டேன்ல... நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்! - நாய் வீடியோ
தெலங்கானா மாநிலம், ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. ஆந்திராவைச்சேர்ந்த ஜெஸ்சி பாய் என்ற நாய் முதலிடத்தை பிடித்து ரூ.18 ஆயிரத்தை தட்டிச்சென்றது. அதனைத்தொடர்ந்து தேவ ராஜுலபண்டா, ராணி ராய்ச்சூர் மற்றும் வெங்கடேசா ஆகியனவும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பரிசை வென்றன. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST