மணிப்பூர் கலவரத்தை கண்டித்து செங்கல்பட்டில் திமுக ஆர்ப்பாட்டம்; ஏராளமான பெண்கள் பங்கேற்பு! - செங்கல்பட்டு மாவட்ட செய்தி
செங்கல்பட்டு: மறைமலைநகர் பகுதியிலுள்ள பாவேந்தர் சாலையில், திமுகவினர், மணிப்பூரில் நடைபெற்று வரும் பிரச்னைகளைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி மகளிர் அணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறையைக் கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசைக் கண்டித்து போராட்டம் நடந்தது.
போராட்டத்தில், கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் பழங்குடி பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், மணிப்பூர் மாநில பழங்குடி பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகக் கோரியும், மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பல்வேறு கோரிக்கை எழுதிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சாலையில் வலிப்பு வந்து உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி செய்த போலீசார்!