தமிழ்நாடு

tamil nadu

திருப்பூரில் திமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

ETV Bharat / videos

Video - திருப்பூரில் திமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்! - bjp

By

Published : Jul 24, 2023, 1:42 PM IST

திருப்பூர்:மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பழங்குடியின பெண் இருவர் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. 

இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இதற்குப் பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இச்சம்பவத்திற்குக் காரணமாக மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள குமரன் சிலை முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட மகளிர் அணியின் சார்பில் மகளிர் அணியின் பிரசாரக் குழுச் செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதலைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் நந்தினி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி, தெற்கு மாநகர மகளிர் அணி துணை செயலாளர் மஹாலெட்சுமி உள்ளிட்டவர்களும் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details