தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி: கோப்பையை தட்டிச் சென்றார் கர்நாடக வீரர்! - etvbharat tamil
திருப்பத்தூர்: வாணியம்பாடி நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி வாரச்சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் தலைமை வகித்த போட்டியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆணழகன்கள் கலந்து கொண்டனர். போட்டி பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தென்னிந்திய அளவிலான சாம்பியன் பட்டத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நட்ராஜ் என்பவர் தட்டி சென்றார்.
பெண்கள் பிரிவில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 2 பெண்களும், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணும் என மொத்தமே 3 பெண்கள் தான் கலந்து கொண்டனர். மேலும் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது.
ஆண்கள் பிரிவில் தென்னிந்திய அளவிலான சாம்பியன்ஷிப் வழங்கப்பட்ட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நடராஜ் என்பவருக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.20 ஆயிரமும், இதே போல் பெண்கள் பிரிவில் சாம்பியன்ஷிப் பெற்ற வாணியம்பாடி பகுதியில் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் ஆகியோர் வழங்கி வாழ்த்தினர்.