டோல் பிளாசா ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி - viral videos
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். திமுக பிரமுகரான இவர், தனது காரில் வேலூருக்கு ஆரணி சாலை வழியாகச் சென்றுள்ளார். அப்போது வல்லம் பகுதியில் உள்ள டோல் பிளாசாவை கடக்கும்போது, இவர் கார் செல்லும் வழியாக செல்லாமல், இருசக்கர வாகனங்கள் செல்லும் ஃப்ரீ லேனில் சென்றுள்ளார்.
அப்போது, டோல் பிளாசா ஊழியர்கள் காரை மறித்து கட்டணம் செலுத்தும் வழியாக வரக் கூறி உள்ளனர். ஆனால், அவர் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்பு இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும், திமுக பிரமுகருடன் மற்றொரு காரில் வந்தவர்களும் டோல் பிளாசா ஊழியர்களை தாக்கி உள்ளனர்.
இதில் டோல் பிளாசா ஊழியர்கள் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து, டோல் பிளாசா ஊழியர்கள் அனைவரும் டோல் பிளாசாவை விட்டு வெளியேறி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்ப்படுத்தி உள்ளது.