விஜயகாந்த் விரைவில் குணமடைய பால்குடம் எடுத்து தேமுதிகவினர் பிரார்த்தனை..! - today latest news
Published : Dec 3, 2023, 7:44 PM IST
தஞ்சாவூர்: சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் விரைந்து பூரண நலம் பெற வேண்டி, தஞ்சை வடக்கு மாவட்டம் மற்றும் கும்பகோணம் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கும்பகோணம் மகாமகக் குளக்கரை ஜெகநாதபிள்ளையார் கோவிலிருந்து சிறுவர், ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து பாடைகட்டி மாரியம்மன் என போற்றப்படும் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலுக்கு சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாகச் சென்று மகா மாரியம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து அவர் விரைந்து பூரண நலம் பெற வேண்டி விசேஷ அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்வில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டெல்லி சாமிநாதன் மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, லதா, ஒன்றிய செயலாளர் இன்பா கோவிந்தராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சுகுமார், வெங்கட்ராமன் உட்பட ஏராளமான தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGGED:
தஞ்சாவூர்