கோவையில் களைகட்டிய சுதந்திர தினம் - மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை - கோவை வஉசி மைதானம்
நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதேபோல கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவை ஒட்டி கோவை மாவட்டத்தில் 1650க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST