தமிழ்நாடு

tamil nadu

போட்டோ தான எடுக்கிற ! குழந்தை மழலைப் பேச்சி :வைரல் விடியோ

ETV Bharat / videos

Viral Video - 'போட்டோ தானே எடுக்கிற' - குழந்தையின் மழலைப் பேச்சு - social media trend

By

Published : Jul 5, 2023, 2:34 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வ.உ.சி நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் சாய்சக்தி நிலா யுகேஜி படித்துவருகிறார். இவரது மனைவி குழந்தை சாய்சக்தி நிலாவுக்கு வீட்டுப்பாடம் எழுத சொல்லிக்கொடுத்துள்ளார். அப்போது அந்தச் சிறுமி வீட்டுப் பாடத்தை எழுதாமல் அழுதும், அடம் பிடித்தும் வீட்டுப்பாடத்தை எழுதிக் கொண்டிருந்தார். 

அப்போது அவரது அம்மா அவரை திட்டியதால் அந்த குழந்தை அழுகத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அவரது தந்தை ஆனந்த் தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். உடனே, அதைப்பார்த்த அந்தக் குழந்தை அழுது கொண்டே ''போட்டோ தானே எடுக்கிற!.. போட்டோ தானே எடுக்கிற! ஒரு நல்ல பிள்ளை எழுதிக் கொண்டு தான் இருக்கேன். போட்டோ எடுக்கிற'' என்று அழுதுகொண்டே மழலைப் பேச்சில் பேசியுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார், மழலையின் தந்தை ஆனந்த்.

வருத்தமாக இருப்பவர்கள் கூட, குழந்தையின் வீடியோவைப் பார்த்தால் உற்சாகமான மனநிலைக்கு மாறிவிடுவார்கள். தற்போது அந்தக் குழந்தையின் க்யூட் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :Tenkasi News - தமிழ்நாட்டில் விளைந்த சூரியகாந்தி மலரைக் காண ஆர்வமுடன் வரும் மலையாளிகள்

ABOUT THE AUTHOR

...view details