தமிழ்நாடு

tamil nadu

இணையத்தில் வைரலாகும் கட்டிடக் கலைஞர்களின் தேசிய கீதம்!

ETV Bharat / videos

77 வது சுதந்திர தினம்: இணையத்தில் வைரலாகும் கட்டிடக் கலைஞர்களின் தேசிய கீதம்! - building doctor national anthem

By

Published : Aug 14, 2023, 11:04 PM IST

மயிலாடுதுறை:நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவை பலரும் பலவிதமாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் மயிலாடுதுறையில் உள்ள "பில்டிங் டாக்டர்" என்ற நிறுவனம் கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு உருவாக்கியுள்ள டிஜிட்டல் தேசிய கீத பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதன்யோகி தயாரிப்பில், கட்டிடப் பணிகளுக்கு தேவைப்படும் கல், மண், ஜல்லி, கம்பி உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி புதுமையான கோணத்தில் நவீன டிஜிட்டல் இசை மூலம் தேசிய கீத பாடலை வடிவமைத்துள்ளனர்.

மேலும் பில்டிங் டாக்டர் பணியாளர்களோடு இணைந்து மேடி என்பவர் இப்பாடலை இயக்கியுள்ளார். மேலும் சாம் ஜோசப் என்பவர் இசை வடிவமைப்பு செய்துள்ளார். மணிகண்டன் என்பவர் காட்சிகளைத் தொகுத்துள்ளார். இப்பாடலை அந்நிறுவனம் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அது வைரலாகி, அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details