பொங்கல் முன்னிட்டு நடந்த பிரியாணி சாப்பிடும் போட்டி.. தருமபுரியில் கொண்டாட்டம்! - பொங்கல் போட்டி
Published : Jan 17, 2024, 9:43 PM IST
தருமபுரி: முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையில் வித்தியாசமான போட்டிகளை நடத்தி இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு சுமார் 50 இளைஞர்கள் பங்கு கொண்ட சிக்கன் சாப்பிடும் போட்டி வைத்து வெகு விமர்சையாக கொண்டாடினர் .
இந்த ஆண்டு புதுமையாகத் திருமணம் ஆகாத இளைஞர்கள் கைகளில் செங்கல்லை ஏந்தியபடி இருக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் இரண்டு கைகளிலும் செங்கல்லைப் பிடித்தவாறு சுமார் இரண்டு நிமிடங்கள் வரை பிடித்திருந்தனர். பொங்கல் திருவிழாவில் பெண்களுக்குச் சாப்பாட்டு ராணி போட்டி நடத்தினர். இப்போட்டியில் 21 பெண்கள் கலந்துகொண்டு சுமார் மூன்று நிமிடத்தில் ஒரு சிக்கன் பிரியாணியை உண்டு சாப்பாட்டு ராணி பட்டத்தை வென்றனர்.
இரண்டு லிட்டர் குளிர்பானத்தை 8 இளைஞர்கள் ஒரு நிமிடத்தில் குடித்து வெற்றி பெற்றனர். ஒரு கிலோ சிக்கனை நான்கு இளைஞர்கள் மூன்று நிமிடத்தில் சாப்பிட்டு வெற்றி பெற்றனர். தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளைக் காண ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூடி நின்று ஆரவாரம் செய்து விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு ரசித்தனர்.