தருமபுரியில் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அவலம்: உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தருமபுரி எம்எல்ஏ: குவியும் பாராட்டுக்கள்!
Published : Sep 18, 2023, 8:38 PM IST
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட 27ஆவது வார்டு வேடியப்பன் திட்டு பகுதியில் நேற்றிரவு (செப்.17) கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் வழிந்து ஓடும் மழை நீர் வீடுகளில் புகுந்தது.
இது தொடர்பாக நகராட்சி நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். மேலும் மழை நீர் வீடுகளில் புகுந்த வீடியோக்களையும் அவருக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்களின் புகாரை பெற்ற தருமபுரி சட்டபேரவை உறுப்பினர், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் என மழைக்காலங்களில் வீடுகளில் மழைநீர் தேங்குவதாக புகார் வந்த இடங்களுக்கு தருமபுரி நகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்குப் பின்னர் அப்பகுதியில் உள்ள கால்வாயை தூர்வாரி, மழை நீர் வெளியேறும் வகையில் சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் சட்டப்பேரவை உறுப்பினர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் போதுமான பேருந்து வசதிகள் இல்லையா? பயணிகள் கூறுவது என்ன?