தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி: பக்தர்கள் தரிசனம் - dharmapuram adhinam golu function
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று (மே. 22) இரவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பக்தர்கள் மற்றும் மடத்து சிப்பந்திகள் சிவிகை பல்லக்கில் நான்கு வீதிகளில் சுமந்து வந்தனர். இறுதியாக ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி நள்ளிரவு நடைபெற்றது. பீடத்தில் அமர்ந்த ஆதீன மடாதிபதிக்கு பாவனை அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இறுதியாக விழாவில் பங்கேற்ற மதுரை ஆதினம் மடாதிபதி, சூரியனார்கோயில் ஆதீனம், செங்கோல் ஆதீனம் உள்ளிட்டவர்களுக்கு தருமபுரம் ஆதீன குருமா சன்னிதானம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று (மே. 23) அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST