இலங்கையில் தருமபுரம் ஆதீன மடாதிபதி.. பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு! - etv bharat tamil
Published : Sep 13, 2023, 10:10 AM IST
யாழ்ப்பாணம் :இலங்கை, யாழ்ப்பாணம் அருகே அமைந்துள்ள நல்லூர் கந்தசாமி கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோயில் தேர் திருவிழாவில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ கையிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஒரு நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் சென்றடைந்தார்.
விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு திருக்கேதீஸ்வரம் திருப்பணி குழுவினர் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலய தேரோட்டத்தில் பங்கேற்கும் தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் திருக்கேதீஸ்வரர் ஆலயம், நகுலேஸ்வரர் ஆலயம், மாவிட்டபுரம் ஆலயம் ஆகிய பாடல் பெற்ற சிவாலயங்களை தரிசனம் செய்தார். அவருக்கு இலங்கையில் உள்ள தமிழ் பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.