தருமபுரி அஷ்டவாராகி கோயிலில் பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை! - Dharmapuri Modakari Astavarahi Temple
தருமபுரி: அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் இருப்பவர், வராகி அம்மன். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமான விஷ்ணுவின் அவதாரங்களில் வராகி அம்மன் ஒன்றாகும். பஞ்சமி அன்று வராகி அம்மனுக்குச் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் மொடக்கேரியில் 16 அடி உயரம் உள்ள அஷ்ட வராகி மகாகாளி திருக்கோயில் உள்ளது..
பஞ்சமியை முன்னிட்டு இன்று காலை வராகி மற்றும் மகாகாளி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்குத் தீபாராதனை நடத்தப்பட்டது.
பஞ்சமியை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சார்ந்த ஏராளமான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களை சுவாமிக்கு ஏலக்காய் மாலை அணிவித்தும், சாம்பல் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சை பழம் கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: மேலக்காவேரி வராஹி அம்மன்.. 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை!