தமிழ்நாடு

tamil nadu

சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் வினோத முறையில் நேர்த்திக்கடன்!

ETV Bharat / videos

கோவில்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் வினோத முறையில் நேர்த்திக்கடன்! - thoothukudi seithikal

By

Published : May 12, 2023, 11:20 AM IST

தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள சோழபுரத்தில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி மூன்று நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக திருவிழா கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டு ஊர் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா.

இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு ஆண்டுதோறும் இத்திருவிழாவின்போது பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என பாகுபாடில்லாமல் அனைவரும் உடம்பில் சேற்றை பூசிக்கொண்டு குளக்கரையில் இருந்து கிளம்பி தெருக்களில் வீதி உலா வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர். அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:மாநில கல்விக் கொள்கை குறித்த ஜவகர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; குழு தலைவர் நீதிபதி முருகேசன் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details