தமிழ்நாடு

tamil nadu

கிரிவலம் முடித்து போதிய பேருந்து இல்லாததால் பக்தர்கள் சாலை மறியல்

ETV Bharat / videos

ஊருக்கு போக பஸ் இல்லை.. திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த பக்தர்கள் திடீர் சாலை மறியல்! - அண்ணாமலையார் கோயில்

By

Published : Jun 5, 2023, 7:21 AM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை புரிவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வைகாசி மாத பௌர்ணமி. அதை முன்னிட்டு உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். இரவு முழுவதும் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் 9 தற்காலிக பேருந்துகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள சென்னை மார்க்கமாகச் செல்லும் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கிரிவலம் முடித்து மூன்று மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருந்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் ஈடுபட்டு உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற போலீசாரிடம் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசாரிடம் பக்தர்கள் “நாங்கள் சென்னையிலிருந்து நேற்று திருவண்ணாமலைக்கு வந்தோம். பின்னர் இரவு முழுவதும் கிரிவலம் முடித்துக் கொண்டு நேற்று காலையில் சென்னை திரும்பத் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வந்தோம். ஆனால் காலை 6.30 மணியிலிருந்து காலை 9.30 மணி வரை சுமார் 3 மணி நேரமாகச் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை" என்று கூறினர். 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்த சிறப்புப் பேருந்தைச் சென்னைக்கு மாற்றி பக்தர்கள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்தது போக்குவரத்து துறை இதனால் பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details