தமிழ்நாடு

tamil nadu

திருப்பூரில் ஆஞ்சநேயர் சன்னதியில், அருள் வந்து அனுமன் போல பாவணை

ETV Bharat / videos

திருப்பூரில் அனுமன் சிலையுடன் இந்தியில் பேசிய பக்தர்.. பரவச வீடியோ வைரல்! - anjaneyar temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 8:08 AM IST

திருப்பூர்:திருப்பூரில் ஆஞ்சநேயர் சன்னதியில், அருள் வந்து அனுமன்போல பாவணை செய்து இந்தியில் ஆஞ்சநேயர் சிலையுடன் பேசி, தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பொங்கலூர் ஊராட்சி பகுதியில் உள்ள அழகுமலை முருகர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, கோயிலில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று (நவ.17) காரிய சித்தி ஆஞ்சநேயர் சன்னதி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், திடீரென்று அவருக்கு அருள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து, ஆஞ்சநேயர் சிலையிடம் இந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உரித்தார்.

அனுமன் போலவே பாவனை செய்து, தேங்காய்களை பற்களால் உரித்ததை கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு, தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்தனர். சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் இயல்பு நிலைக்குத் திரும்பினர். இதனால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details