அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்! - அக்னிபாத் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் போராட்டம்
தேனி: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை முன்பாக சாலை மறியல் போராட்டதில் இன்று ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST