திருப்பூர் கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்..! - 2024 புத்தாண்டு
Published : Jan 2, 2024, 6:54 AM IST
திருப்பூர்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று (ஜன.1) திருப்பூரில் உள்ள அனைத்து கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். நினைத்த காரியம் நடைபெறும் கோயிலாக பக்தர்களால் கருதப்படுகிறது.
மேலும், நேற்று(ஜன.1) 2024 புது வருடப்பிறப்பு என்பதால், கோட்டை மாரியம்மனுக்கு மாப்பொடி, திரவியப்பொடி, பால் சந்தனம், குங்குமம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் மற்றும் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 போன்ற புதிய ரூபாய் நோட்டுகளாலும், மலர் மாலைகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் நடைபெற்றன.
பின், தீப ஆராதனை நடைபெற்றது. ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோயில் நிர்வாக தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.