Video: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆளுநர் ரவி சாமி தரிசனம் - Piliyarpatti Governor s visit today
சிவகங்கை:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முன்னதாக திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் டிரஸ்ட் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆளுநர் வருகையை ஒட்டி, பிள்ளையார்பட்டி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.