கடும் சீற்றத்துடன் மாமல்லபுரம் கடற்கரை! - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: நெருங்கி வரும் மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், கல்பாக்கம் கடற்கரையில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பாதுகாப்பான இடங்களில் படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலோர பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாமல்லபுரம் அருகே இன்று (டிச.9) நள்ளிரவில் மாண்டஸ் புயல் கரையை கடக்கிறது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST