'திமுக என்றாலே அரசாங்க சொத்துகளை கொள்ளையடிப்பவர்கள் தான்' - சிவி சண்முகம் விமர்சனம்! - திமுக முன்னனி தலைவர்கள்
விழுப்புரம்: 'திமுக முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள் சொத்து பட்டியல் வெளியிடுவது என்பது ஒன்றும் புதியதல்ல என்றும்; திமுக என்றால் கொள்ளை அடிப்பது, அரசாங்கத்தின் சொத்தை அபகரிப்பது, சொத்து சேர்ப்பதுதான் அவர்களின் மாடல், கொள்கை' என சிவி சண்முகம் சாடியுள்ளார்
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர், மோர் பந்தல் வழங்கல் திட்டத்தையும் மற்றும் புதிய அதிமுக கொடி கம்பத்தினையும் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சிவி சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் குறித்து வெளியிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சிவி சண்முகம், “திமுக முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள் சொத்து பட்டியல் வெளியிடுவது என்பது ஒன்றும் புதியதல்ல.
இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். திமுக என்றால் கொள்ளை அடிப்பது, அரசாங்க சொத்தை அபகரிப்பது, சொத்து சேர்ப்பதுதான் அவர்களின் கொள்கை” எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க:"இது தாங்க ரஃபேல் வாட்ச் பில்; ரூ.3 லட்சத்துக்கு வாங்கினேன்" ஆதாரம் காட்டிய அண்ணாமலை!