இணையத்தில் வேகமாகப் பரவும் கோலியின் "மரண மாஸ்" நடனம்! - chennai news
சென்னை:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானம் ரூ.139 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றது. இதில் கூடுதலாக ஐந்தாயிரம் இருக்கைகளுடன் புதிய கேலரி அமைக்கப்பட்டிருந்தது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைத்தார். இங்கு இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியின் நடுவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் "மரண மாஸ்" என்ற பாடலுக்கு மைதானத்தில் உற்சாகமாக நடனமாடினார். அவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.