தமிழ்நாடு

tamil nadu

பசி கொடுமையால் நெருப்பைத் திண்ணும் பசு

ETV Bharat / videos

திருப்பத்தூரில் உணவின்றி தவிக்கும் கால்நடைகள்.. கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் இரை தேடிய அவலம்! - வி சி எம் தெரு

By

Published : Jul 7, 2023, 11:01 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.சி.எம் தெருவில் குப்பையில் நெருப்பு எரிந்து கொண்டிருந்த பொழுது, பசியின் காரணமாக உணவு தேடிய பசு ஒன்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பு என்று கூட பாராமல் உணவு உண்ணும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேப்பாரற்று அங்கும் இங்குத்தாக பசுக்கள், காளைகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவை சுற்றித் திரிந்து வருகின்றது. காய்கறி கடை, மளிகைக் கடை, பழக்கடை உள்ளிட்ட கடைகளில் பகல் நேரங்களில் விற்பனைக்கு போக வீணாகும் இலை தழை, காய்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை உரிமையாளர் கடையின் முன்பு கொட்டி தீ வைத்து கொளுத்தி வருகின்றனர்.

இது போன்ற சமயங்களினால் உணவு தேடி வரும் கால்நடைகள் நெருப்பு என்றும் பாராமல் அதனை உண்ண முயல்வதால் பாதிப்படையக் கூடிய சூழ்நிலை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி கொழுந்துவிட்டு எரியும் புகை மூட்டத்தால் சுகாதார சீர் கேடும் ஏற்படுகிறது. 

விலங்குகளைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் பொதுமக்கள் குப்பைகளில் தீயைப் பொருத்தாமல் இருக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் நலன் கருதிச் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் குப்பைகளைத் தினம் தினம் அகற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details