குற்றாலம் சாரல் திருவிழா; படகு போட்டியைத்தொடங்கி வைத்த கலெக்டர்! - படகு போட்டி
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரல் திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், நான்காம் நாளான இன்று ஐந்தருவி படகு குழாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான படகுப்போட்டி நடைபெற்றது. படகுப்போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு கலைவாணர் அரங்கத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST