தருமபுரி எஸ்பி ஆபிஸில் காதல் ஜோடி தஞ்சம்.. நடந்தது என்ன? - தருமபுரி நர்மதா
Published : Aug 22, 2023, 8:24 PM IST
தருமபுரி: பாலக்கோடு சாணார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவா் இன்று(ஆகஸ்ட் 22) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார். அந்த மனுவில், "நர்மதா என்பவரை தான் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு நர்மதா வீட்டில் சம்மதிக்கவில்லை. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 20-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். இதனை அறிந்த நர்மதா வீட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் எனது நண்பர்களை அழைத்து சீனிவாசன் எங்கே இருக்கிறார் என்று கேட்டு துன்புறுத்துவதாகவும், தங்கள் இருவரையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய சீனிவாசன், "நான் ஹோட்டல் நடத்தி வருகிறேன்.நர்மதா நர்சிங் படித்து வருகிறார். ஐந்து வருடங்கள் காதலித்து வந்தோம். நர்மதா வீட்டிற்கு காதல் விவகாரம் தெரிந்தவுடன் பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். வீட்டை விட்டு வெளியேறி பழனியில் திருமணம் செய்து கொண்டோம். நர்மதாவின் உறவினர்கள் அவரது பெற்றோர் எனது பெற்றோர் மற்றும் உறவினர்களை சீனிவாசன் எங்கே? என்று கேட்டு மிரட்டி வருவதால் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம்" இவ்வாறு கூறினார்.