பாம்பை விரட்டி கெத்து காட்டிய கோழி.. - வனப்பகுதி
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள எருமபாறை மலைவாழ் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட காடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் எருமைபாறை வன கிராமத்திற்குள் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம் மலைப்பாம்பு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில் மலைவாழ் மக்கள் வளர்க்கப்படும் கோழி அப்பகுதிக்குள் வராமல் நீண்ட நேரம் போராடி தடுத்து வனப்பகுதிக்குள் அனுப்பியது. இதைக் கண்ட அப்பகுதி மலைவாழ் மக்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST