Coromandel Express accident: கோர ரயில் விபத்தின் மீட்பு காட்சிகள் - கோரமண்டல் ஹௌரா ரயில்கள் மோதிய
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம், பாலசோர் அருகே நேற்று (ஜுன் 2) பயங்கர விபத்துக்குள்ளானது. மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் பாஹனாக நகர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு பயங்கரமான விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் முன்னதாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயிலும், அப்பகுதியில் ஏற்கனவே தடம் புரண்டு கிடந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில் பெட்டிகளின் மீது மோதின. இந்த பெரும் விபத்தில் சரக்கு ரயில் மூன்று ரயில்கள் சிக்கியதில் பயணிகள் ரயிலில் பயணித்தவர்கள் பலரும் படுகாயமடைந்தனர்.
இதுவரையில், ஒடிசா ரயில் விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 900 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.