வெள்ளியை உருக்கி கொட்டியது போல காட்சி தரும் மூலையாறு அருவி..
திண்டுக்கல்: கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள மூலையாறு அருவியில், நீர் கொட்டுகிறது. பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர் வருவதாகவும், இதனால் வெள்ளியை உருக்கி கொட்டியது போல அருவி காட்சி தருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கோடை மழையின் நீட்சியாக தென்மேற்கு பருவ காற்றும் நல்ல மழையை கொடுத்து வருவதால், மூலையாறு அருவி சிறிதும் வற்றாமல், நீர் கொட்டி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வத்தலக்குண்டு சாலையில் பயணிக்கும் பயணிகள் அருவியின் அழகை ரசித்து செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST