தமிழ்நாடு

tamil nadu

2000 ரூபாய் நோட்டுகளுக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்!!

ETV Bharat / videos

ரூ.2000 நோட்டுகளுக்கு பாடை கட்டி, ஒப்பாரி... காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்! - திண்டுக்கல் மாவட்ட செய்தி

By

Published : May 21, 2023, 7:44 AM IST

திண்டுக்கல்: நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் மாதத்திற்குள் பொது மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. மேலும் வங்கிகள் பொது மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கிட வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க:பழனி திருக்கோயிலிருந்து மலேசியா முருகன் கோயிலுக்கு வஸ்திர மரியாதை.

ஆர்ப்பாட்டத்தின் போது கட்டு கட்டான 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பாடை கட்டியும், மாலை அணிவித்தும், சங்கு ஊதியும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'புதுச்சேரி CM கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்திற்கு அனுமதி': மாஜி CM குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details