ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் - ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் - ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
சென்னை:பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் பாஜக சட்டப்பேரவை தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனை கண்டித்து ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் மாநில இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் நரேந்திர தேவ், காங்கிரஸ் நகர செயலாளர் அமித் பாபு தலைமையில் சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
அப்போது 50-க்கும் மேற்பட்ட ஆவடி காவல் துறையினர் மறியல் செய்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த ரயில் மறியல் போராட்டத்தால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. தற்போது கைது செய்தவர்களை ஆவடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தால் ஆவடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:இந்திரா முதல் ஜெயலலிதா வரை - ராகுலுக்கு முன்பே தகுதி நீக்கம் ஆன தலைவர்கள்...