தமிழ்நாடு

tamil nadu

கழுத்தில் எம்டி பாட்டில் மாலையுடன் வந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்

ETV Bharat / videos

கழுத்தில் காலி பாட்டில் மாலையுடன் வந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்: குடிநீர் தட்டுப்பாடு குறித்து நடவடிக்கை கோரி வலியுறுத்தல்! - மாநகராட்சி மேயர் சரவணன்

By

Published : Aug 8, 2023, 10:21 PM IST

திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டையில் முறையாக குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து மேயரிடம் காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் மனு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவாக குடிநீர் பிரச்னையை சீர் செய்யாவிட்டால் காந்திய வழியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் காலி தண்ணீர் பாட்டிலை கழுத்தில் மாலையாக அணிவித்து மனு அளிக்க வந்தார். பொதுமக்களுடன் மனு அளித்த அவர், பாளை மண்டலம் 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் ஆயுதப்படை குடியிருப்பு தென்புறம், இசக்கி அம்மன் கோயில் வடபுறம், செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு அப்பாசாமி தோட்டம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர், நான்கு மாதங்களாக முறையாக கிடைப்பதில்லை என்றும்,

ஒரு சில நாட்கள் மட்டும் சிறிது நேரம் குழாய்களில் குடிதண்ணீர் வருகிறது என்று கூட்டத்தில் முறையிட்டார். இதனால் அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சீராக குடிதண்ணீர் தினமும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த குடிநீர் பிரச்னையை சீர் செய்யாவிட்டால், மாநில காங்கிரஸ் தலைவரிடம் அனுமதிபெற்று மிகப்பெரிய அளவில் காந்திய வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details