"நீதிபதி நாக்கை அறுப்போம்" - காங். மாவட்ட தலைவர் மீது வழக்கு!
திண்டுக்கல்: மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியின் SC / ST அமைப்பினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியது, "நாட்டிற்காக உயிரைக் கொடுத்த இயக்கம் காங்கிரஸ் தான். அப்படிப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ராகுல் காந்திக்கு மார்ச் 23 ஆம் தேதி சூரத் நீதிமன்ற நீதிபதி 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்போம்" என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வண்ணம் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது அவதூறு வார்த்தையை பேசியதற்காக 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.