கல்லூரி விழாவில் பங்கேற்ற யுவன் சங்கர் ராஜா - பாடல்கள் பாடி உற்சாகம் - கல்லூரி கலை நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா
ஈரோடு அடுத்துள்ள பெருந்துறை வாய்க்கால் மேடு தனியார் கல்லூரியில் இரண்டு நாட்களாக கலை நிகழ்ச்சி விழா நடைபெற்றது. அதில் கல்லூரியில் பயிலும் 2- ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினார். இந்த விழாவில் முன்னணி இசை அமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ,மாணவியர்களின் கோரிக்கை ஏற்றுத் தான் இசையமைத்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை பாடி அசத்தினார். யுவன் சங்கர் ராஜா பாடத் தொடங்கியது முதல் கல்லூரி மாணவ மாணவிகள் கைதட்டியும், விசில் அடித்தும் உற்சாகமடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST