ரோட்டில் நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது கிரேன் மோதி விபத்து - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி
Published : Oct 26, 2023, 11:46 AM IST
கோயம்புத்தூர்:பொள்ளாச்சி மரப்போட்டையைச் சேர்ந்தவர், சுஷ்மா. இவர் உடுமலை ரோட்டில் உள்ள தனியார் கல்லூரில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று பொள்ளாச்சி தேர்நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரது பின்னே வந்த கிரேன் வாகனம், சிறுமி மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி பலத்த காயமடைந்தார்.
இதனைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த பொதுமக்கள், காயமுற்ற சிறுமியை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுமி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
இதனை அடுத்து, சிறுமியின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், கிரேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.