Nilgiris Onam festival: கல்லூரிகளில் களைகட்டத் துவங்கிய ஓணம் பண்டிகை - ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி கொண்டாட்டம்! - கல்லூரிகளில் களைகட்டத் துவங்கிய ஓணம் பண்டிகை
Published : Aug 25, 2023, 12:08 PM IST
நீலகிரி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முக்கிய சந்திப்புப் புள்ளியாகும். இப்பகுதியில் மலையாள மொழி பேசுவோர் அதிக அளவில் உள்ளனர். எனவே மலையாள மக்களின் பண்டிகையான ஓணம் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதி வருவதையொட்டி, நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை, அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல இடங்களில் ஓணம் திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள், ஓணம் பண்டிகையை உற்சாகமாக நடனங்கள் ஆடி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் கேரளா செண்டை மேளம், கதகளி மற்றும் கேரளா பாரம்பரிய உடைகளை அணிந்த கல்லூரி மாணவிகள், கல்லூரியின் வாசலில் பூக்களால் கோலமிட்டு கேரளா பாரம்பரிய நடனங்கள் ஆடி ஓணம் பண்டிகையை முன்கூட்டியே கொண்டாடினர். மேலும், ஆண்டுதோறும் இவ்வாறு கல்லூரிகளில் ஓணம் கலை நிகழ்ச்சிகள் முன்கூட்டியே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.