தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் ஆட்சியர் திடீர் ரெய்டு; 7 டன் பிளாஸ்டிக் பறிமுதல்!!

ETV Bharat / videos

திருப்பத்தூர் நகராட்சியில் ஒரு மணி நேர ஆய்வில் 7 டன் நெகிழி பொருட்கள் பறிமுதல்

By

Published : Mar 11, 2023, 9:41 PM IST

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தண்டபாணி கோயில் தெரு, தர்மராஜா கோயில் தெரு, பேருந்து நிலையம் ஆகிய தெருக்களில் உள்ள பல்வேறு கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் சம்பவயிடகளுக்கு  நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பல்வேறு வகையான கடைகளிலிருந்து 7 டன் எடை உள்ள தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள் கைப்பற்றப்பட்டன.

இதோடு தர்மராஜா கோயிலுக்கு அருகே நெகிழி பைகள் வைக்கப்பட்டிருந்த ஒரு குடோனுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின் போது நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வருவாய் துறை, நகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட நெகிழி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த  உத்தரவை மீறி பயன்படுத்துவோம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க:”திமுகவினர் மக்களிடம் உதை வாங்குவார்கள்" - முன்னாள் அமைச்சர் சின்னையா!

ABOUT THE AUTHOR

...view details