தமிழ்நாடு

tamil nadu

சமூக நல்லிணக்கதிற்கு எடுத்துகாட்டாய் நடைபெற்ற புனித அந்தோணியார் தேர் திருவிழா

By

Published : Jun 19, 2023, 11:24 AM IST

ETV Bharat / videos

சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் நடைபெற்ற புனித அந்தோணியார் தேர்த் திருவிழா!

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், புலியகுளம் பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயத்தின் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேர் சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு மேல் தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியில் 15 தேர்கள் கலந்து கொண்டன. இதற்கு முன்னர், இந்த தேர் தயாரிப்புப் பணி புலியகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடாரம் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்தத் தேர் தயாரிப்புப் பணியில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தினரும் ஈடுபட்டனர். மத ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக புலியகுளம் பகுதியில் பெரியநாயகி மாதா, சகாயமாதா, புனித சூசையப்பர், அன்னை தெரசா, தங்க மாதா, புனித அந்தோணியார், புனித மைக்கேல் அதிதூதர், உலக ரட்சகர், புனித செபஸ்தியார், மரிய மதலேனாள், பூண்டி மாதா, வேளாங்கண்ணி மாதா, காணிக்கை மாதா, குழந்தை இயேசு மற்றும் லூர்து மாதா என பதினைந்து தேர்கள் இந்தப் பவனியில் உலா வந்தது.

சமூக நல்லிணக்கம் என்பது தற்போதைய காலத்தில் தேவையான ஒன்றாக இருக்கும் சூழலில் புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details