திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது- மு.க. ஸ்டாலின் - திரைத்துறையும் திமுகவும் பிரிக்க முடியாது
சென்னையில், தக்ஷின் தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பில் இருந்தவன் நான். சில திரைப்படங்கள் நடித்துள்ளேன். எனவே என்னை முதலமைச்சர் என்று பார்க்காமல், உங்களில் ஒருவனாக என்னை பார்க்கவேண்டும். திரைத்துறையையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என்றார்.