ஓபிஎஸ் தொகுதியை மறந்த முதலமைச்சர் - கூச்சலிட்ட அதிமுகவினர்! - ஓபிஎஸ் தொகுதியை மாற்றிக் கூறிய முதலமைச்சர்
திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இன்று பேசினார். அப்போது பேசிய அவர், "எனது கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவரின் எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சி துணை தலைவரின் பெரியகுளம் தொகுதியாக இருந்தாலும்..." என்று கூற, அப்போது கூச்சலிட்ட அதிமுக பேரவை உறுப்பினர்கள், 'பெரியகுளம் அல்ல, போடி' என்றனர். பின் அதைத் திருத்திக்கொண்டு போடி என்று கூறினார். மேலும், "அனைத்து தொகுதிகளுக்கும் சமமான நடத்தப்படக்கூடிய திட்டங்கள் தீட்டப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST