தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் ரூ.34.65 கோடியில் நவீன தொழிற்பயிற்சி மையம் திறப்பு

ETV Bharat / videos

வேலூரில் ரூ.34.65 கோடியில் நவீன ஐடிஐ: காணொலி வாயிலாக துவக்கி வைத்த முதலமைச்சர் - Chief Minister M K Stalin

By

Published : Jul 13, 2023, 4:16 PM IST

வேலூர்மாவட்டம் அருகேயுள்ள அப்துல்லாபுரத்தில், தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்பயிற்சி நிலையத்தில், தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் அதிநவீன 4.0 என்ற தொழிற்பயிற்சி மையம் ரூ.34.65 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை இன்று (ஜூலை 13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

இதனை அடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொழில் மையத்தினை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இவ்விழாவில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தொழிற்பயிற்சி நிலையத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். 

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தின் மூலம் கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி பயின்று வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தொழில் மையம் துவங்கப்பட்டுள்ளது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ரூ.32 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் நலன் கருதி
மேலும் பல கூடுதல் கட்டடங்களும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. அப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு 
திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details