சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; ரயில் கண்ணாடி உடைப்பு - ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு - Clash between Two College Students in Chennai
சென்னை: சென்னையில் இருதரப்பு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரயில் கண்ணாடிகள் உடைந்த விவகாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சூளூர் பேட்டை செல்லும் புறநகர் ரயிலில் நேற்று மாலை பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று (ஜூலை 6) பயணம் செய்தனர். இந்த ரயில், விம்கோ நகர் ரயில் நிலையம் வந்தபோது இருதரப்பு மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
உடனே இருதரப்பு மாணவர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அருகில் இருந்த கற்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் போர்களம் போல் காட்சியளித்தது.
இந்த மோதலில் மாணவர்கள், பயணிகள் உட்பட சிலர் காயமடைந்தனர். மேலும், மாணவர்கள் கற்களால் ரயிலின் முன்றாவது பெட்டியில் உள்ள நான்கு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகலின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.